கனடாவின் சர்ரே நகரில் உள்ள பியர் கிரீக் பூங்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜகேந்தர் குரானா கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் தகவல் கோரப்பட்ட நிலையில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




