தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

 

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, அமெரிக்க ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

இந்தச் சந்திப்பில், தமிழகத்தில் ஃபோர்டின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மறைமலைநகரில் ரூ.3,250 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய எஞ்சின் தயாரிப்பு ஆலை மூலம் சுமார் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Read Previous

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!

Read Next

ஹார்முஸ் நீரிணை பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular