தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!

 

 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு, திமுக முன்னாள் அமைச்சர்களான கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

 

அவரை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்ற நிலையில், போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கைது நடவடிக்கையில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டிய திமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தாய் அன்பின் அருமையை உணர்த்தும் அம்மா – மகன் உறவு பற்றிய கண் கலங்க வைக்கும் பதிவு..!!

Read Next

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular