தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடலில் புயல் உருவாக்கும் நிலையில் மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்…
தமிழகத்தில் தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது இது புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது ஏற்கனவே நவம்பர் 8 தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ள நிலையில், தற்பொழுது தமிழகத்தில் புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது இதனை தொடர்ந்து கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது, மேலும் மழைக்காலங்களில் மின்சார கம்பங்கள் இருக்கும் இடத்திலோ அல்லது கனமழை நேரத்தில் சாலையோரங்களில் நடக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ள நிலையில் மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது..!!




