தமிழக பின்னலாடை துறைக்கு தனி வாரியம்: நெசவாளர்களுக்கு 100% சூரிய மின்சார மானியம்!

 

தமிழக பின்னலாடை துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பல்வேறு பங்குதாரர் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம்’ உருவாக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் இன்று (செப். 1) அறிவித்துள்ளார்.

இதனுடன், கைத்தறி நெசவாளர்களின் மின்சாரச் செலவைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, 1,000 தனிநபர் தறிக்கூடங்களில் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க 100% முழு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் பின்னலாடை மற்றும் கைத்தறி துறையின் வளர்ச்சிக்கும், நெசவாளர்களின் செலவைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read Previous

ஹைதராபாத்தில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: பைக் மெக்கானிக் கைது!

Read Next

காரைக்குடியில் நள்ளிரவில் கோர விபத்து: அதிவேக பைக் மோதி இளைஞர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular