சேலம் தொப்பூர் பகுதியில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் மது ஆகிய இருவர் திடீரென மயங்கி விழுந்தனர். ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இருவரையும், அங்கிருந்த சக காவலர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




