காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவைக்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து இன்று 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேட்டூர் அணையின் வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்ட முதலமைச்சருக்கு, காவிரி வடிநில வரைபடம் குறித்து அதிகாரிகள் விளக்கினர். பின்னர் விவசாயிகளை சந்தித்த அவர், திறக்கப்பட்டுள்ள காவிரி நீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். பாசனத்துக்கும் குடிநீருக்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், கிடைக்கும் நீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.




