தமிழரின் கணக்கதிகாரம்.. ஓர் பூசனிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா..??

Oplus_131072

 

ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்

கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்

ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை “X” என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது “90X” ஆகும்.

அதை பாதியாக்கினால் கிடைப்பது “45X” ஆகும்

அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது “135X” ஆகும்

ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்

அடுத்த முறை பூசனி வாங்கும் போது சரிபாருங்கள்.

Read Previous

அமானுஷ்ய சக்தி.. தீராத நோய்களையும் தீர்க்கும்..!! அதிசய சாகா மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு..??

Read Next

வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டா.. உடலில் ஏற்படும் அசத்தல் மாற்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular