‘தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிக்க முயற்சி’… மத்திய அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி..!!

 

 

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

 

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த மசோதா வந்தே மாதரம் பாடலை வலிந்து திணிக்கும் முயற்சியாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் நோக்கம் இதில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், மொழி மற்றும் மாநில அடையாளத்தை பாதிக்கும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என்றும், இந்த மசோதாவுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. தமிழக அரசு அமைப்பில் வேலைவாய்ப்பு..!!

Read Next

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் காலிஃபிளவர் 65.. சுவை அசத்தும் எளிய ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular