மாலை நேர சிற்றுண்டியாக பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் 65 போன்றவற்றை விரும்புபவர்களுக்கு, சைவத்தில் அதே சுவையை தரும் காலிஃபிளவர் 65 ஒரு அருமையான தேர்வாகும். வெளியே வாங்காமல் வீட்டிலேயே எளிதாகவும் சுவையாகவும் இதை செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
– காலிஃபிளவர் – 1
– உப்பு – தேவையான அளவு
– மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
– மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
– சீரகத்தூள் – ½ டீஸ்பூன்
– மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
– சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
– கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
– இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
– உளுத்தம் பருப்பு – சிறிதளவு (விருப்பத்திற்கேற்ப)
– சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிஃபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி, வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரில் 5–10 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தம் செய்யவும். பின்னர் தண்ணீரை வடித்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சோள மாவு, கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து காலிஃபிளவரில் நன்றாகப் பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
அதன்பின் கடாயில் எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் காலிஃபிளவர் துண்டுகளை பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை லேசாக வறுத்து மேலே சேர்த்து பரிமாறலாம்.
சூடாக தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறினால், வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் அசத்தலான காலிஃபிளவர் 65 தயார்!




