மானசா வாரணாசி, பெமினா மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்று பிரபலமானவர். இவர் தெலுங்கு திரையுலகில் ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தற்போது மானசா வாரணாசி தமிழ் சினிமாவில் அறிமுகமாகத் தயாராகி வருகிறார். அவரிடம் இரண்டு தமிழ் இயக்குநர்கள் கதை கூறியுள்ளதாகவும், அதில் ஒரு படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்க உள்ள நிலையில், ரசிகர்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற தொடர்ந்து உழைக்கத் தயாராக இருப்பதாக மானசா வாரணாசி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சிறந்த கதைகளை தேர்வு செய்து, அவர்களின் இதயங்களில் இடம்பிடிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.




