Godzilla vs. Kong மற்றும் Godzilla x Kong திரைப்படங்களில் ‘ஜியா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கெய்லி ஹாட்டில் (18) கார் விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் அவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம் வயதிலேயே கெய்லி ஹாட்டில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




