தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பு: தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி..!!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் அருகே இரு பெண்கள் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலக வளாகம் முன்பு திடீரென மயங்கி விழுந்த இரு பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு பெண்களும் எதற்காக இந்த முடிவை எடுத்தனர், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வாகாது. மன அழுத்தம், விரக்தி அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்படும் போது உடனடியாக உதவி பெறுவது முக்கியம்.

மன அழுத்தம் தொடர்பான உதவிக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

Read Previous

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி வாய்ப்பு: பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள் ஆகஸ்ட் 28க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

Read Next

செந்தில்பாலாஜி இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை: மருத்துவமனை சென்றுள்ளதாக தம்பி அசோக் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular