டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி தினசரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த செந்தில்பாலாஜி இன்று ஆஜராகவில்லை.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வரும் நடைமுறை இருந்து வந்த நிலையில், இன்று செந்தில்பாலாஜி நேரில் வராததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது தம்பி அசோக் மட்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். செந்தில்பாலாஜி ஏன் ஆஜராகவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்த அசோக், அவர் மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் இன்று காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்று வரும் தினசரி கையெழுத்திடும் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.




