தவெகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்?.. முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு பதவி வழங்க எதிர்ப்பு..!!

அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்குவது தொடர்பாக, கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கே முதலில் பொறுப்புகள் வழங்க வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருவதால், புதிய நியமனங்களில் கட்சித் தலைமை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ‘குதிரை பேர’ குறித்த விசாரணை நடைபெற்று வருவதால், தற்போது புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, ஏற்கனவே தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்களுக்கு எப்போது பொறுப்புகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Read Previous

சீனாவில் பயங்கர சூறாவளி.. காரையே தூக்கி வீசிய காற்று; 20 லட்சம் பேர் பாதிப்பு..!!

Read Next

கடத்தப்பட்ட கணவரை மீட்க கேங்ஸ்டர் தாயையே பணயமாகப் பிடித்த மனைவி.. மீண்டும் வைரலாகும் சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular