முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, வரும் செப்டம்பர் 15 முதல் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை’ செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, ஒரு குழந்தை பெற்றிருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றிருந்தாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தகுதியான அனைத்து தாய்மார்களுக்கும் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் பயனை பெற RCH ID அல்லது PICME பதிவை கட்டாயமாக செய்திருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.




