காவிரி விவகாரத்தில் திமுக – தவெக மீது அதிமுக எம்.பி. இன்பதுரை கடும் விமர்சனம்..!!

 

 

காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுக மற்றும் தவெக இணைந்து அரசியல் நாடகம் நடத்துவதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். காவிரி தொடர்பான இறுதி தீர்ப்பு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு அமலில் உள்ள நிலையில், புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும், கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதும் தேவையற்ற நடவடிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், மக்கள் விரோத செயல்களில் திமுகவும் தவெகவும் ஒன்றுக்கொன்று போட்டிபோடுவதாக விமர்சித்த அவர், “திமுக ஆல்பா கொரோனா வைரஸ் என்றால், தவெக பீட்டா கொரோனா வைரஸ்” என்று கடுமையாக சாடியுள்ளார். அவரது இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Read Previous

‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ யாருக்கெல்லாம்? தமிழக அரசு முக்கிய விளக்கம்..!!

Read Next

40 நாட்கள் இருளில் வாழ்ந்த கிராமம்.. காரணம் ஒரு சிறிய பறவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular