தினமும் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா?.. அப்போ கண்டிப்பா இதை மட்டும் செய்யுங்க..!!

இன்றைய உலகம் இந்திர மயமாகிவிட்டது. மக்கள் எப்போதும் ஒருவித பரபரப்போடு காணப்படுகிறார்கள். ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. நம் முன்னோர்கள் வாழ்க்கை முறையை எடுத்துக் கொண்டால் காலை 5 மணிக்கு எழுவது அன்றாட வேலைகளை உடல் உழைப்பை பெரிதும் பயன்படுத்தி வேலை செய்வது சரியான நேரத்தில் சாப்பிடுவது சரியான நேரத்தில் தூங்குவது என்று வாழ்க்கை முறையை கடைபிடித்து வந்தார்கள். நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது என்ற பெயரில் போன் மற்றும் இணையத்தில் மூழ்கி இருக்கிறோம். மக்களுக்கு உடலை பேண வேண்டும் என்ற சிந்தனை வருவதில்லை சிலர் மறந்தும் கூட விடுவார்கள். ஏற்கனவே ஃபாஸ்ட் ஃபுட் மோகம் பலவித நோய்களை ஏற்படுத்தி மக்களை தாக்கி வருகிறது. இந்நேரத்தில் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கொரோனா காலகட்டத்திற்கு பின்பு அபாய மணி ஒலித்ததற் போல் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சத்தான உணவு வகைகளான சிறு தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் நோய்நொடி இல்லாத வாழ்விற்கு நல்ல உணவு பழக்கங்கள் உடன் உடற்பயிற்சி செய்வது முக்கியம்.

ஆனால் வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லாமல் இருக்கலாம். முக்கியமாக சேரில் உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் பணி செய்யும் மக்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படி உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் தங்கள் உடலை பாதுகாக்க ஒரு வழி இருக்கிறது. அதுதான் நடை பயிற்சி.

உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள் தினசரி குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அலுவலகத்திற்கு செல்லும் போது, வீட்டு வேலைகளுக்கு இடையில், பள்ளி கல்லூரி செல்வது போன்ற எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இயன்ற அளவுக்கு நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தினசரி நடை பயிற்சியை மேற்கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும், மன அழுத்தம் குறையும், நீரழிவு வராமல் தடுக்கும், நீரழிவு இருப்பவர்களுக்கு கூடாமல் கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், எலும்புகளை வலுப்படுத்தும், அதிகப்படியான உடல் கொழுப்புகளை குறைக்கும் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை உடல் பருமன். நடைப்பயிற்சியினால் எடை குறைப்பதை பற்றி ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சி செய்துள்ளது அதில் நடைப்பயிற்சியை தினசரி மேற்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதன் மூலமாகவே 50 சதவீதம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நம் போனிற்கு கொடுக்கிற நேரத்தை சற்று குறைத்துக் கொண்டு நம் உடலுக்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் உடல் எடை குறையும் தவிர பலவித நோய்கள் வராமல் நம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு நடை பயிற்சி பெரிதும் உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read Previous

உணவு வாங்கித் தராத ஊழியர் பணிநீக்கம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Read Next

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular