தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா..?

இந்த நவீன காலத்தில் நாம் அனைவரும் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் சத்தான உணவுகளை பின்பற்றுவது என்பதை பலரும் சுத்தமாகவே மறந்து விட்டோம். அனைவரும் ரெடிமேட் உணவுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இந்த இந்த வகையில் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்களை பற்றி தற்போது பார்க்கலாம். முட்டை என்றாலே சிலருக்கு அவித்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ஆம்லெட் செய்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு அதை பொடிமாஸ் போல வெங்காயம அதிகமாக போட்டு சாப்பிட பிடிக்கும். முட்டையில் உள்ள லூடின், லீக்சைக்தைன் ஆகியவை கரோட்டினாய்டை அதிகளவு கொண்டுள்ளது. இதனால் கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்கள் ஆகியவை வராமல் இது தடுக்கும். இதனால் கண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும், கோலைன் என்ற பொருள் இதய நரம்பு மண்டல பிரச்சனையை குறைத்து மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது. மேலும் முட்டைகள் உள்ள புரோட்டின் மற்றும் பிற சத்துக்கள் குறைந்த அளவு கலோரி போன்றவற்றை உடலுக்கு நன்மை தரும் வகையில் கிடைக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இது உதவுகிறது. மேலும் புற்றுநோய்க்கான ஆபத்தையும் இது குறைக்கிறது. ஆகையால் நாம் தினமும் ஒரு முட்டையாவது உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

Read Previous

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்தில் திடீர் திருப்பம்..!! மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்த ஜெயம் ரவி!!

Read Next

பெண்களே வீட்டில் அதிர்ஷ்டம் வர கட்டாயமாக இதை செய்ங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular