அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தான் திமுகவில் இணைவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். திருச்சியில் நேற்று (ஜன., 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பயணிப்பேன் என்றார். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்தும், கூட்டணி குறித்து கருத்து சொல்லும் நிலையில் தான் இல்லை என்றும் குறிப்பிட்டார். அதிமுகவில் பல ஆண்டுகள் மாவட்டச் செயலாளராகவும், அவைத் தலைவராகவும் வெல்லமண்டி நடராஜன் பதவி வகித்துள்ளார்.




