தீபாவளி வந்தாச்சு..!! பட்டாசு வெடிக்கும் போது கவினிக்க வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை..!!

தீபாவளி வந்துவிட்டது. இப்போதே எல்லா பக்கமும் தீபாவளி கலை கட்டி விட்டது. தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசுகள் இனிப்பு பலகாரங்கள் என ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். தீபாவளிக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி செய்யும் ஒரு விஷயம் பட்டாசு வெடிப்பது. ஆனால் இந்த பட்டாசு வெடிப்பது அவ்வளவு விளையாட்டுத்தனமான காரியம் கிடையாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அது என்னவென்று இனி பார்ப்போம்.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்க செல்லும் போது கட்டாயம் காலில் செருப்பு அணிந்து கொண்டுதான் தெருவில் செல்ல வேண்டும். ஏனென்றால் எல்லா பக்கமும் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் தீப்பொறிகள் கிடக்கும். அதனால் செருப்பு போடாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது.

அடுத்ததாக பெரியவர்களானாலும் சரி சிறியவர்களானாலும் சரி பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று தீபற்றுவது போல் தெரிந்தால் அந்த வாளி தண்ணீரை கொண்டு அணைத்து விடலாம். அதேபோல் சிறிய வடிவில் கம்பி மத்தாப்புகள் போன்றவற்றை வெடித்து முடித்த பிறகு ஆங்காங்கே போடாமல் ஒரு ஓரத்தில் வாளியில் தண்ணீர் வைத்து அதற்குள்ளே போட வேண்டும். திறந்தவெளியில் கூடிய மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிப்புக்காக கூடவே நிற்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை சட்டை பைகளிலோ பாக்கெட் பைகளிலோ போடவே கூடாது. அடுத்ததாக வெடிக்காத பட்டாசுகளை சற்று தூரமாக வைத்திருக்க வேண்டும் பக்கத்திலேயே வைத்திருக்கக் கூடாது. கையில் பிடித்தவாரோ தூக்கி வீசியோ பாட்டில்கள் தேங்காய் சிரட்டை போன்ற உபகரணங்களில் வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசு வெடித்து முடித்த பின்பு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கொண்டாட்டங்களோடு பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள்.

Read Previous

தீபாவளியை ஒட்டி இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! முழு விவரம் உள்ளே..!!

Read Next

குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular