தேவையான பொருள்: கோதுமை ரவா 20 கிராம் உப்புக்கடலை 20 கிராம் கம்பு 20 கிராம் கேழ்வரகு 20 கிராம் அரிசி 20 கிராம் முந்திரி பருப்பு 40 கிராம் பாதாம் பருப்பு 40 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பனை வெல்லம் தவிர மீதம் உள்ள பொருட்களை தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்தபொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பொடிகளை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் . மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் மற்றும் இரண்டு தேக்கரண்டி அரைத்தப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும். பிறகு நன்கு கூழ் தன்மை அடையும் வரை கொதிக்க விடவும். இது இயற்கை பொருளால் உருவான சத்தான கூழ் ஆகும்.