தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் தனித்தனியாக கிடந்த தலை மற்றும் உடலை போலீசார் மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




