Oplus_131072
கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்கட்டும்.
*10-40 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரையை இரு கையிலும் பிடிக்க வேண்டும்.
பலன்கள்: தலையில் ரத்த ஓட்டத்தைச்
சீர்செய்கிறது. இதன் அடையாளமாக, முகம் பொலிவடைவதைக் காணலாம். குறைவான தைராய்டு சுரப்பால் (Hypothyroid) உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, சீரற்ற மாதவிலக்கு, முடி உதிர்தல், தொண்டையில் கட்டி, வீக்கம் ஆகிய பிரச்னைகளுக்குத் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்திட நல்ல மாற்றம் தெரியும். பின் கழுத்து தடிமனாக வீங்கிஇருத்தல், முன் கழுத்தும் பின் கழுத்தும் சேர்ந்து வளையமாக வீங்கி இருத்தல், கழுத்துப்பட்டை கறுப்பாக இருத்தல், கழுத்து இறுக்கம் ஆகியவை குணமாக, இதை மூன்று மாதங்கள் செய்ய வேண்டும். பீனியல், பிட்யூட்டரி, தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்கி, பி.சி.ஓ.டி பிரச்னையைச் சரிசெய்யும்.குரல் மாறுபாடு, கரகரத்த குரல், பேச்சுக் குறைபாடு ஆகியவை நீங்கும்.




