பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி வினோஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், அதுகுறித்த புகைப்படத்தை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




