ரூ.100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

 

 

கரூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜரானார்.

 

சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகலை அவர் பெற்றுக்கொண்டார். மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக வரும் ஜூலை 27-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

2-வது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கொலை.. பாட்டி கைது..!!

Read Next

நடிகர் சதீஷின் தந்தை மறைவு… திரையுலகினர் நேரில் அஞ்சலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular