நன்னாரி சர்பத் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று தான் நன்னாரி சர்பத் ஆகும். இது தாகத்தை தணிப்பதுடன், பல்வேறு நன்மைகளையும் கொடுக்கின்றது.

நன்னாரி சர்பத்

ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளன.

இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றி, அழற்சி பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன.

மூட்டு வலி, முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுவதுடன், இதிலுள்ள சபோனின் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோயை விரைவாக குணமாக்கவும் செய்கின்றது.

மேலும் இவை நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டதால், தொழு நோய் மற்றும் சிபிலிஸ் போன்ற நோய்களுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் இதிலுள்ள பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதுகாப்பிற்கும் சிறந்ததாக இருக்கின்றது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

இதை அதிகம் குடிக்கும்போது சிலருக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பருக வேண்டும்.

நன்னாரி வேரை நீரில் ஊற வைத்து குடிப்பது இன்னும் சிறந்ததாக கருதப்படுகின்றது.

Read Previous

50 வயதை கடந்த ஆங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

நெஞ்சு சளியை கரைத்து எடுக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular