கேரளா: திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் நர்சிங் மாணவி விருந்தா (20) என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வெங்கனூரைச் சேர்ந்த இவர், சாப்பிடும்போது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




