தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், பனிமலர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் பி. சின்னதுரை, இயக்குநர்கள் டாக்டர் சி. சக்திகுமார் மற்றும் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது, தமிழக அரசின் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்கு ஆதரவாக ரூ.1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை முதலமைச்சரிடம் வழங்கினர். இந்த நிதியுதவி, மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. அரசு–தனியார் இணைந்து மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த பங்களிப்பு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




