நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் மோர் குழம்பு..!!

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியன நிறைந்து காணப்படுகின்றது.

இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

 

இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் காணப்படுகின்றது.

 

 

 

இத்தனை ஊட்டச்சத்துக்ளை கொண்ட வெண்டைக்காயை கொண்டு சுசையான மோர் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

தயிர் – 1 கப்

வெண்டைக்காய் – 5

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க தேவையானவை :


துருவிய தேங்காய் – 1/2 கப்

கடலை பருப்பு – 1 தே.கரண்டி

சின்ன வெங்காயம் – 2

பச்சைமிளகாய் – 3

இஞ்சி துண்டு – 1

சீரகம் – 1/2 தே.கரண்டி

 

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 1தே.கரண்டி

கடுகு – 1/2 தே.கரண்டி

உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

 

முதவில் கடலை பருப்பை நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.

பின்னர்  துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி துண்டு, சீரகம், ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அதைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில்  வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

 

நன்றாக வதங்கிய பின்னர் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வதக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டு பொறியவிட வேண்டும்.

பின்னர் அதில் காய்ந்தமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் சிறிதளவு  தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து தேவையான அளவு உப்பு  போட்டு வதக்கிய வெண்டைக்காயையும் சேர்த்து அதிகம் கொதிக்க விடாமல் இறக்கினால் சுவையாக மணமணக்கும் மோர் குழம்பு தயார்.

Read Previous

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?.. சிறுநீரக பிரச்சனையாம்..!!

Read Next

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? இரவில் இதை மட்டும் செய்ங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular