நீங்கள் நினைத்தது கை கூட வேண்டுமா..!! இதை செய்து பாருங்கள் போதும்..!!

ஈர்ப்பு விதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஒரு வழியை நேற்று பார்த்தோம். இன்று மற்ற சில வலிகள் என்னவென்று இந்த பதிவில் காண்போம். முன்பு கூறியது போல நமது சிந்தனைகள் நேர்மறையாக இருந்தால் நமக்கு நடக்கும் செயல்களும் நேர்மறையாக தான் இருக்கும். இதைத்தான் ஆங்கிலத்தில் லைக் அட்ராக்ஸ் லைக் என்று கூறுவார்கள்.

இது மட்டுமில்லாமல் நாம் தினமும் நேர்மறை வார்த்தைகளை கேட்பதன் மூலம் ஈர்ப்பு விதியை பயன்படுத்தலாம். இதை அபர்மேஷன்ஸ் என்று கூறுவார்கள். அதாவது நாம் யார் என்பதையும் நாம் என்னவாக வேண்டும் என்பதையும் நமக்குள் கூறிக் கொண்டே இருப்பது. உதாரணத்திற்கு நமது பள்ளிப் பருவ காலங்களில் என்னால் முடியும் என்று கூற சொல்வார்கள். இதுவும் ஒரு வகையான அபர்மேஷன் தான். இதை நாம் நமக்குள் கூறிக் கொண்டே இருக்கலாம் அல்லது சமூக வலைத்தளங்களில் சென்று ஆடியோவாகவும் கேட்கலாம்.

மற்றொரு வழி எப்போதும் நாம் சந்தோஷமாக இருப்பது. அதாவது ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் அந்த நாள்  முடியும் வரை எப்படி இருப்போம் என்பதை விதைக்கும். உதாரணத்திற்கு காலை  நம் கட்டிலில் இருந்து எழும்போது கீழே ஏதேனும் ஒரு கூர்மையான பொருளின் மீது காலை வைத்தால் நாம் கத்துவோம். அது நமது அமைதியை பாதிக்கும். பிறகு நாம் என்ன செய்தாலும் அதில் குழப்பமும் கோபமும் அதிகமாக இருக்கும். அதுவே அந்த கூர்மையான பொருளின் மீது காலை வைத்த பிறகு ஒரு 2 நிமிடம் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்தால் திரும்ப மன அமைதியை நாம் அடையாளம். அந்த நாளும் நமக்கேற்றார் போல் இருக்கும்.

இவை எல்லாம் செய்தால் நிச்சயம் நமக்கு என்ன வேண்டுமோ அது நடக்கும். ஈர்ப்பு விதி என்றாலே நேர்மறையான சிந்தனைகளால் நேர்மறையான சூழலை ஏற்படுத்திக் கொள்வதுதான். இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. இந்த ஈர்ப்பு விதியை பயன்படுத்தி சாதித்த ஒரு சில நபர்களைப் பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் காண்போம்.

Read Previous

பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுப்பது எவ்வளவு பெரிய தவறு என தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மருத்துவமனையில் பணம் செலுத்தாததால் சிகிச்சை மறுப்பு..!! கர்ப்பிணி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular