நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி: பிரதீப் ரங்கநாதன் கடும் கண்டனம்..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நீதி கோரி டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைதியான முறையில் போராடியவர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் கேள்விகளுக்கு ஜனநாயக முறையில் பதில் அளிக்க வேண்டும் என்றும், காவல்துறையின் வலிமையை பயன்படுத்தி அவர்களின் குரலை ஒடுக்கக் கூடாது என்றும் பிரபல இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “கேள்விகளுக்கு லத்தியை வைத்து பதில் சொல்லாதீர்கள்” என பதிவிட்ட அவர், மாணவர்கள் எழுப்பும் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை என குறிப்பிட்டார்.

நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.

மேலும், மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக திரைத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

திருப்போரூரில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை..!!

Read Next

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் வெளிநாட்டில் கல்வி: சமூக வலைதளங்களில் விவாதம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular