திருப்போரூரில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை..!!

சென்னை அடுத்த திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு பயின்று வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ்ராய் (24) தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் ரியாஸ்ராய் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் குடும்பத்தினருக்கும், கல்லூரி நிர்வாகத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

‘ஜனநாயகன்’ பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவது வெட்கக்கேடு – டிடிவி தினகரன்..!!

Read Next

நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி: பிரதீப் ரங்கநாதன் கடும் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular