ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று (ஜூலை 17) சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
ஆன்மீக ரீதியாக இறைவனை மனமார வணங்குவதற்கும், தட்சிணாயன புண்ணிய காலத்தில் விவசாயப் பணிகளை தொடங்குவதற்கும் ஆடி மாதம் மிகவும் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மேலும், உடல் நலத்தை பாதுகாக்கும் பாரம்பரிய கூழ்வார்த்தல், ஆடி பெருக்கு உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் இந்த மாதத்தில் நடைபெறுவதால், மக்கள் பக்தியுடனும் உற்சாகத்துடனும் ஆடி மாதத்தை கொண்டாடி வருகின்றனர்.




