படிக்கட்டுகளில் ஏறுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!
நம்ம வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பாக இதை சொல்லி நாம் கேட்டிருப்போம். சும்மா சோம்பேறித்தனமா இப்படி உக்காந்துட்டு இருக்காம அந்த படிக்கட்டுல ஏறி இறங்கு அப்படினாச்சி உடம்புக்கு குறை தான் பார்க்கலாம். அப்படின்னு வீட்ல இருக்க அம்மாவும் சரி பாட்டியும் சரி பலரும் சொல்லுவாங்க. ஆனால் படிக்கட்டில் ஏறி இறங்கினால் உடல் எடை குறைவதோடு பல நன்மைகள் இருக்கிறது அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
படிக்கட்டுகளில் ஏறுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் தினமும் 7 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் கொலஸ்ட்ரால் எரிக்கப்படும் இதன் மூலம் இதய நோய்கள் மாரடைப்பு போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும் உடலில் உள்ள உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள் நுரையீரலுக்கான ரத்த ஓட்டம் மேம்பட்டு சுவாச கோளாறுகளில் இருந்து விடுதலை கிடைக்கும் மன அழுத்தமும் பதற்றமும் குறைய தினமும் படி ஏறுவதும் இறங்குவதும் நல்லது. வலுவான எலும்பு காரணமாக மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் அடையலாம்.




