காதலித்தப் பெண் ஏமாற்றி விட்டதால் ஒரு நாள் முழுதும் எல்லா ஆசைகளையும் அனுபவித்து விட்டு மாலையில் தற்கொலை செய்து இறந்துப் போவதாக முடிவெடுத்தான் ஒருவன்.
இரண்டு ஷோ சினிமா,மதியம் பிரியாணி,எல்லாம் முடித்து விட்டு மாலை ஒரு கடற்கரையில் மதுவில் விஷம் கலந்து சாப்பிட தயாராக வைத்துக் கொண்டு முதலில் விஷமற்ற மது அருந்த ஆரம்பித்தான்.
போதை ஏறிக் கொண்டிருக்கும் போது அங்கு வாங்கிய சுண்டல் காலியாகவும் அதில் உள்ள வாசகங்களைப் பிரித்து படித்தான்.
அதில் பிரச்சனை என்று வெளியில் எதுவுமில்லை.bஎல்லா பிரச்சனைக்கும் உன்னுடைய மனமே காரணம் என்று ஓஷோவின் வரிகள் அதில் இருந்தது.
ஓஷோவைப் பற்றிய அந்தக் கட்டுரையை, கருத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் அதிலிருந்ததால் தற்கொலை முடிவை தள்ளி வைத்து விட்டு அந்த எண்ணுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்ய இருந்ததையும், தற்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் விபரம் சொல்லி, சாகும் முன் அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளான்.
அந்த எண்ணுக்கு உரியவர் உடனடியாக அவனை அழைத்துப் பேசினார்.
அவன் சொன்னான் என்னுடைய காதலை மறக்க முடியவில்லை மனம் தொடர்ந்து அவளுடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. நான் என்ன செய்வது என்றான்.அவர் சொன்னார் அதைப் பற்றி பிறகு பேசுவோம். நான் சொல்லும் ஒன்றை முதலில் செய் என்று சொல்லி ஒரே பாடல் மீண்டும் மீண்டும் வருமாறு பதிவு செய்யப்பட்ட ஒரு ஒலிப்பதிவை ஒரு மணி நேரம் கேட்கச் சொன்னார்.
ஒரு மணி நேரம் கழித்து அவன் வந்தான்.
அவர் கேட்டார் பாடல் எப்படி இருந்தது?
அவன் சொன்னான் முதலில் நன்றாக இருந்தது ஒரு மணி நேரம் முடியும் போது கொடுமையாகிவிட்டது.
அவர் சொன்னார் உன்னுடைய காதலியை மணந்திருந்தால் இது தான் நடந்திருக்கும். சில காலம் தான் அவளை நீ பார்த்திருக்கிறாய். அதனால் தான் அவளை உன்னால் மறக்க முடியவில்லை. அவளால் வேறு ஒருவனை தேர்ந்தெடுக்க முடியும் போது நீயும் வேறு ஒரு ஒருத்தியைத் தேர்ந்தெடுக்கலாமே. அது இருக்கட்டும் அந்த ஒலிப்பதிவு எங்கே?
அவன் சொன்னான் என்னால் தாங்க முடியவில்லை அதை நான் தூக்கி எறிந்துவிட்டேன்.
அதற்கு அவர் சொன்னார் நீ அதைத் தூக்கி எறிந்துவிட்டாய். உன் மனமும் ஒரு ஒலிப்பதிவு தான்.
உன் காதலி பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் உன் மனதை என்ன செய்யப் போகிறாய்?
சிறிது நேரம் யோசித்த அவன்.
அப்பொழுது அவன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு விட்டதாகவும் எவ்வளவு தேவையில்லாமல் தன்னை வருத்தி வந்து உள்ளான் என்றும் சிரித்து உள்ளான்.
இது தான் வாழ்க்கை…
இவ்வளவு தான் வாழ்க்கை..




