பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கைபர் பக்துன்க்வா மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் கோர காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




