பிரிட்ஜ் பராமரிப்பு பற்றிய சில குறிப்புகள்..!! கண்டிப்பா இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க..!!
இந்த காலகட்டத்தில் அனைவரின் வீட்டிலும் இருக்கும் மின்சாதனங்களில் ஒன்றுதான் பிரிட்ஜ். ஃப்ரிட்ஜ் வாங்குவது மட்டுமல்ல அதை எந்த அளவிற்கு பராமரிக்கிறோம் அந்த அளவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். இந்நிலையில் பிரிட்ஜ் பராமரிப்பு பற்றிய சில குறிப்புகளை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஃப்ரிட்ஜை சமையலறையில் ஒருபோதும் வைக்க கூடாது. ஏனென்றால் அது புகைப்பட்டு நிறம் போய்விடும். ஃப்ரிட்ஜை அடிக்கடி திறக்க கூடாது திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. குறிப்பாக அந்த கம்பிகளில் ஒருபோதும் தண்ணீர் படக்கூடாது. ஃப்ரிட்ஜ் துடைக்கும் போது ஈரத்துணி பயன்படுத்தக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு தான் துடைக்க வேண்டும். பிரிட்ஜில் இருந்து வித்தியாசமான ஓசை ஏதேனும் வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்க கூடாது. பிரிட்ஜிக்கு கண்டிப்பாக நிலை இணைப்புகள் கொடுக்க வேண்டும். ஃப்ரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைப்பது மிகவும் சிறந்தது. குறிப்பாக உணவுப் பொருட்களை சூட்டோடு ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.




