பீகார் மாநிலத்தில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குமார் என்பவர் உணவு வழங்க தாமதமானதாக கூறி தனது சகோதரரின் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் ஆத்திரத்தின் உச்சத்தில் அவர் கோடாரியால் தாக்கி அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் தலையை வீட்டின் முன்புறம் இருந்த மரத்தில் தொங்கவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட குமார் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்திற்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




