பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் – இபிஎஸ் மீண்டும் கோரிக்கை..!!

தமிழக அரசு தேர்தல் காரணமாகவே பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (ஜன.6) சந்தித்த பின் பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கியபோது ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கோரிய அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது அதனை செயல்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியின் இறுதி பொங்கல் பண்டிகை என்பதால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Previous

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்க.. சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம்..!!

Read Next

தெரிஞ்சுக்கோங்க..!! மின்னல் ஏன் எப்போதும் பனை மரம் மீதே விழுகிறது தெரியுமா?.. அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்காம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular