பொள்ளாச்சி நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்டிருந்த 22 டெண்டர்களை தமிழ்நாடு அரசு திடீரென ரத்து செய்துள்ளது.
இந்த டெண்டர்கள் திறந்தவெளி முறையில் வெளியிடப்படாமல், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் வரையறுக்கப்பட்ட டெண்டராக அறிவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஒப்பந்த நடைமுறைகளில் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி, ஒப்பந்ததாரர்கள் நேரில் வரக்கூடாது என்ற வழிகாட்டுதலுக்கு மாறாக நேரில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, டெண்டர் நடைமுறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து கவனம் செலுத்திய அரசு, 22 டெண்டர்களையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




