ஜந்தர் மந்தர் CJP பேரணி வன்முறை: 250 வீடியோக்கள் மூலம் காவல்துறை தீவிர விசாரணை..!!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற CJP பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள 250-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் ட்ரோன் பதிவுகளை ஆய்வு செய்து, கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அடையாளம் காணப்படும் நபர்களின் முந்தைய குற்றப் பின்னணி, தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் தூண்டப்பட்டார்களா, அல்லது வன்முறைக்கு முன்கூட்டியே திட்டமிடல் நடைபெற்றதா என்பது குறித்தும் காவல்துறை தகவல்களை சேகரித்து வருகிறது.

Read Previous

டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்ய பெண் முக மசாஜ்.. வைரலான வீடியோவால் இணையத்தில் விவாதம்..!!

Read Next

பொள்ளாச்சி நீர்வளத்துறையில் 22 டெண்டர்கள் திடீர் ரத்து: விதிமீறல் காரணமாக அரசு நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular