மகளிர் உரிமைத்தொகை: தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தீவிரம்!

 

 

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது உதவித்தொகை பெறும் பயனாளிகளின் தகுதி தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அரசு விதிகளுக்கு மாறாக உதவித்தொகை பெறுபவர்களை கண்டறிந்து, அவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி, மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் குறித்து தீவிரமாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

 

அரசின் நிதி உண்மையாக தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மாணவியை ஆபாசமாக பேச கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்: இருவர் கைது!

Read Next

4 நாட்களில் ரூ.120 கோடி வசூல்… சூர்யாவின் படத்திற்கு மாஸ் வரவேற்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular