முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் கடந்த வாரம் மக்கள் குறைதீர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்தத் தளத்தில் பதிவு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணையதளத்தின் நிலை விவரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களின் குறைகளை விரைவாகப் பதிவு செய்து தீர்வு காணும் நோக்கில் இந்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை பதிவு செய்துள்ளனர்.
ஆனால், பெரும்பாலான மனுக்களின் நிலை மாற்றமின்றி இருப்பதாகக் கூறப்படுவதால், “புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காத நிலையில் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?” என்று சில பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது பதில் இதுவரை வெளியாகவில்லை.




