ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரின் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் உரிமையாளர்கள், 3 அழகிகளை பிடித்தனர். இந்த சோதனையில் பிடிபட்ட 3 வெளிநாட்டு அழகிகளில், ஒருவருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அங்கு வாடிக்கையாளர்களாக சென்றவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை பேர் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.




