ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணி..!! மசாலா பொடி இல்லாத மட்டன் பிரியாணி..!!

தேவையான பொருட்கள்👇

 

🌺அரை கிலோ மட்டன்

🌺அரை கிலோ சீரக சம்பா அரிசி

🌺நாலு பெரிய வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்

🌺நாலு தக்காளி

🌺மூன்றுபச்சை மிளகாய்

🌺ஐந்து காய்ந்த மிளகாய்

🌺ரெண்டு இன்ச் இஞ்சி

🌺15 பூண்டு

🌺நாலு பட்டை

🌺எட்டு இலவங்கம்

🌺நாலு ஏலக்காய்

🌺அரை எலுமிச்சை சாறு

🌺இரண்டு ஸ்பூன் தயிர்

🌺எண்ணெய்

🌺முந்திரி

🌺நெய்

🌺உப்பு

🌺புதினா

🌺கொத்தமல்லி இலை

 

செய்முறை 👇

 

📍முதலில் ஒரு பவுலி இரண்டு பட்டை நாலு லவங்கம் 2 ஏலக்காய் வரமிளகாய் ஐந்து முந்திரி சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்

 

📍ஊற வைத்திருந்த வர மிளகாய் பட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் இஞ்சி பூண்டு 3 தக்காளி பழம் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

 

📍குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் இரண்டு ஏலக்காய், இரண்டு பட்டை, நாலு இலவங்கம், நறுக்கிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

 

📍பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.

 

📍வதங்கிய பின், அரை கிலோ மட்டன் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும் ஐந்து விசில் வைத்து மட்டனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

 

📍பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த சீரக சம்பா அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு ஒரு விசில் விடவும்.

 

📍இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்..

Read Previous

முருங்கை சூப்.. இப்படி ஒருமுறை செய்ங்க..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!

Read Next

எந்த உணவு ஆயினும் இந்த சைடு டிஷ் வேற லெவல்ல இருக்கும்..!! அசத்தலான முட்டை மசாலா இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular