மதுராந்தகம் அருகே கோர விபத்து.. லாரியை முந்த முயன்ற கார் மோதி 3 பேர் பலி..!!

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

இந்த விபத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த கோபு மற்றும் தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளஞ்செழியன், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

தமிழகத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு..!! சவரனுக்கு ரூ.2,160 குறைவு..!!

Read Next

நீட் தேர்வு தோல்வி: மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular