தமிழகத்தில் இன்று (ஜூலை 24) தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.270 குறைந்து, ரூ.13,230க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு இது சற்று நிம்மதியான செய்தியாக பார்க்கப்படுகிறது.




