மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதலீடு திட்டம்..!! வட்டி மட்டுமே இவ்வளவு கிடைக்குமா?..

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்ஜெட் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் பெண்களுக்காக அமல்படுத்தப்பட்ட  ஒரு திட்டத்தின் செயல்திறனை 2025-ம் ஆண்டு பட்ஜெட்டில் மேம்படுத்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பெண்களின் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்க 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு “மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்” (MSSC) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் குறுகிய காலத்திற்கு உத்தரவாதமான வட்டி வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் “ரூ.1,000 முதல் ரூ.2 லட்சம்” வரை முதலீடு செய்யலாம். இதை தொடர்ந்து, உங்களின் 2 வருட முதலீட்டுக் காலத்திற்கு 7.5% தனிப்பட்ட வட்டி வழங்கப்படும். மேலும், நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் பெண்கள் MSSC கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள்   2 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் உங்கள் கணக்கில் ரூ.2,32,044 இருக்கும். இதில் உங்களுக்கு வட்டி மட்டுமே “ரூ.32,044” கிடைக்கும். இறுதியாக இத்திட்டத்தில் பெண்களின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

IND vs ENG 1st T20: முதலாவது பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்?.. பிட்ச் யாருக்கு சாதகம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular