மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

 

ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவிய மழைப்பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், பொன்னி அரிசி கிலோ ரூ.80 ஆகவும், பாபட்லா (RNR) ரக அரிசி கிலோ ரூ.70 ஆகவும், சீரகச் சம்பா அரிசி கிலோ ரூ.200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.375 வரை உயர்ந்துள்ளது.

வரத்து குறைவு நீடித்தால், வரும் நாட்களில் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை உயர்வு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மேயர் பிரியா மீது சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டுகள்..!! வைரலாகும் செய்தி..!!

Read Next

தங்கம் வாங்க திட்டமா?.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular